நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பண்பாடுகள் உலகத்தை மாற்றிய வரலாறு
அறிமுகம்
இன்று நாம் உலக வரலாற்றைப் பார்க்கும்போது, ஒரு உண்மையை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை வருகிறது.
பண்பாட்டின் மூலமும், நல்லொழுக்கத்தின் மூலமும், மனித நேயத்தின் மூலமும் ஒரு மார்க்கம் உலகம் முழுவதும் பரவியது என்றால், அது இஸ்லாம் மட்டுமே.
இது உணர்ச்சிப் பேச்சல்ல.
இது வரலாற்றுச் சான்றுகளோடு நிரூபிக்கக்கூடிய உண்மை.
ஆனால் மேற்கத்திய உலகில், குறிப்பாக Orientalism (ஓரியன்டலிசம்) என்று அழைக்கப்படும் ஒரு அறிவுசார் இயக்கம், இஸ்லாத்தைப் பற்றி பல தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
அதில் மிக முக்கியமான குற்றச்சாட்டு:
“இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது”
இந்தக் குற்றச்சாட்டு உண்மையா?
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஒரு ராணுவ வீரரா?
அவர்கள் வாழ்க்கை முழுவதும் போர் செய்த போராளியா?
இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால்,
ரசூல் ﷺ அவர்களின் 23 ஆண்டுகால நபித்துவ வாழ்க்கையை நேர்மையாக, முழுமையாக ஆராய வேண்டும்.
நபிகள் நாயகம் ﷺ – ஒரு போராளியா? அல்லது ஒரு பண்பாட்டுத் தலைவர்?
ரசூல் ﷺ அவர்களின் வாழ்க்கை 40 வயதில் நபித்துவம் தொடங்கி, 63 வயதில் முடிவடைகிறது.
இந்த 23 ஆண்டுகள்:
ஆயுத வசதிகள் இல்லை
தொடர்பு சாதனங்கள் இல்லை
வாகன வசதிகள் இல்லை
அரசியல் அதிகாரம் ஆரம்பத்தில் இல்லை
இப்படிப்பட்ட சூழலில்,
ஒரு மார்க்கம் அரபு தீபகற்பம் முழுவதும், பின்னர் உலகம் முழுவதும் பரவியது என்றால்,
அதற்கு காரணம் வாள் அல்ல,
அக்லாக் (பண்பாடு).
மக்கா காலம் – பொறுமையின் உச்சம்
மக்கா காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு.
ஏன்?
ஏனெனில்:
அடிதடி
சமூக புறக்கணிப்பு
பொருளாதார தடைகள்
கொலை மிரட்டல்கள்
எல்லாவற்றையும் முஸ்லிம்கள் சந்தித்தார்கள்.
அந்த நேரத்தில்:
ரசூல் ﷺ ஒரு போர் கூட தொடங்கவில்லை
ஒரு வாளும் உயர்த்தவில்லை
பதிலடி கொடுக்க அனுமதி கூட இல்லை
பொறுமை + பண்பாடு — இதுதான் மக்கா காலத்தின் அடையாளம்.
மதீனா – பண்பாடுகளால் இஸ்லாம் பரவிய காலம்
மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பிறகு,
மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்க ஆரம்பித்தார்கள்.
ஏன்?
• ரசூல் ﷺ அவர்களின் நடத்தையைப் பார்த்து
• அவர்களின் கருணையை உணர்ந்து
அவர்களின் நீதி, நியாயத்தை கண்டு
இதைக் காட்டும் பல சம்பவங்களில்,
மிக முக்கியமான இரண்டு சம்பவங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
மஸ்ஜிது நபவியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ஒரு நாள்,
ரசூல் ﷺ அவர்கள் மஸ்ஜிது நபவியில் சஹாபாக்களுடன் அமர்ந்திருக்கிறார்கள்.
மஸ்ஜிது நபவி:
ஈச்ச ஓலைகளால் வேயப்பட்டது
மணல் தரை
எளிய கட்டிடம்
ஆனால் அதன் கண்ணியம்?
• மஸ்ஜிதுல் ஹராமுக்கு அடுத்த சிறந்த பள்ளிவாசல்
ஒரு தொழுகை = 1000 தொழுகைகளுக்கு சமம்.
இப்படிப்பட்ட புனிதமான இடத்தில்,
ஒரு நாட்டுப்புறத்து அரபி உள்ளே வருகிறார்.
•நேராக பள்ளியின் மூலையில்
• அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க
• சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கிறார்
சஹாபாக்களின் எதிர்வினை
சஹாபாக்களுக்கு கோபம் வராதா?
நிச்சயம் வரும்.
புனித இடம்
அல்லாஹ்வுடைய தூதரின் பள்ளி
வெளிப்படையான அசிங்கம்
சஹாபாக்கள் எழுந்தார்கள்.
ரசூல் ﷺ அவர்களின் அப்ரோச்
உடனே ரசூல் ﷺ சொன்னார்கள்:
“உட்காருங்கள்… அவரை விடுங்கள்.”
அவரை நிறுத்தவில்லை.
கத்தவில்லை.
அவமானப்படுத்தவில்லை.
அவர் முடித்த பிறகு:
ஒரு சஹாபியை அழைத்து
ஒரு வாளி தண்ணீர் ஊற்றி
அந்த இடத்தை சுத்தம் செய்யச் சொன்னார்கள்
பிறகு அந்த மனிதரை அருகில் உட்கார வைத்து சொன்னார்கள்:
“இது மஸ்ஜித்.
இங்கே தொழுகை, குர்ஆன், திக்ர் செய்ய வேண்டிய இடம்.
இப்படிப்பட்ட காரியங்கள் செய்யக்கூடாது.”
விளைவு என்ன?
அந்த மனிதன்:
வாதம் செய்யவில்லை
கோபப்படவில்லை
•இரண்டு கைகளையும் உயர்த்தி துஆ செய்தார்:
“யா அல்லாஹ்!
முஹம்மதுக்கும் எனக்கும் மட்டும் இரக்கம் காட்டு.
வேறு யாருக்கும் வேண்டாம்.”
ரசூல் ﷺ சிரித்துக்கொண்டு சொன்னார்கள்:
“அல்லாஹ்வுடைய விசாலமான இரக்கத்தை ஏன் சுருக்குகிறாய்?”
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
•இது வாளின் வேலைதானா?
• இல்லை — பண்பாட்டின் வெற்றி.
சுமாமா (துமாமா) – ஒரு பகைவர் இஸ்லாமை ஏற்ற வரலாறு
இன்னொரு அதிர்ச்சியான சம்பவம்.
சஹாபாக்கள் வந்து புகார் செய்கிறார்கள்:
“யா ரசூலல்லாஹ்!
மக்கா செல்லும் வழியில் ‘யமாமா’ பகுதியில்
சுமாமா என்ற ஒருவர்
எங்களை அடிக்கிறார்,
பொருளாதாரத்தை பறிக்கிறார்,
கொலை மிரட்டல் விடுகிறார்.”
இது சாதாரண குற்றமல்ல.
ரசூல் ﷺ என்ன செய்தார்கள்?
சொன்னார்கள்:
“உங்களால் முடிந்தால்,
அவரை பிடித்து கொண்டு வாருங்கள்.”
ஒரு நாள்,
சுமாமா பிடிபட்டார்.
அவரை: மஸ்ஜிது நபவிக்குள்
பாதுகாப்பாக கட்டி வைத்தார்கள்
கைதி – ஆனால் மனித கண்ணியத்துடன்
முதல் நாள்: ரசூல் ﷺ வந்து கேட்டார்கள்:
“சுமாமா, இப்போது என்ன சொல்கிறாய்?”
அவர் சொன்னார்:
“முஹம்மது,
நீங்கள் என்னை கொன்றால் — நான் கொல்லப்பட வேண்டியவன்.
விட்டுவிட்டால் — நன்றியோடு நடப்பேன்.”
ரசூல் ﷺ எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார்கள்.
இரண்டாவது நாள்: அதே கேள்வி.
அதே பதில்.
மூன்றாவது நாள்: ரசூல் ﷺ சொன்னார்கள்:
“அவரை விடுங்கள். போகட்டும்.”
அதிர்ச்சி!
ஒரு:
எதிரி
தாக்குதல்காரன்
முஸ்லிம்களுக்கு துன்பம் கொடுத்தவன்
விடுவிக்கப்பட்டான்.
மாற்றம் எங்கே நடந்தது?
சுமாமா:
தன் ஊருக்குச் செல்லவில்லை
நேராக ஒரு கிணற்றுக்கு சென்றார்
குளித்தார்
சுத்தமாகி
திரும்ப மஸ்ஜிது நபவிக்கு வந்தார்.
முன்பு சொன்னது:
“யா முஹம்மது…”
இப்போது சொன்னது:
“யா ரசூலல்லாஹ்…
உங்கள் கையை நீட்டுங்கள்.”
கலிமா
இஸ்லாம்
முழு மாற்றம்
அவர் சொன்ன வார்த்தைகள் வரலாற்றுச் சாட்சி:
“இந்த உலகத்தில்
எனக்கு மிகவும் வெறுப்பான முகம் உங்கள் முகம்தான்.
இப்போது —
மிகவும் பிரியமான முகமாக மாறிவிட்டது.”